ஈஸ்டர் தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கை பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.   

குறித்த அறிக்கையை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க ஏற்பாடாகியிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்து அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குழுவின் பரிந்துரைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Tue, 03/30/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை