பண்டிகைக் காலத்தில் தேவை ஏற்படின் பயணத் தடைகள்

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

தமிழ்,- சிங்கள புத்தாண்டு மற்றும் உயிர்த்த ஞாயிறு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தேவை  ஏற்பட்டால் மக்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை விதிக்க நேருமென கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த நத்தார் பண்டிகையோடு தொடர்ந்த விடுமுறையின்போது அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டனர். கடந்த ஜனவரி பெப்ரவரி மாதங்களில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தேவை ஏற்பட்டால் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை தனிமைப்படுத்தலிற்கான தினங்களில் மாற்றம் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.அதன்மூலம் குறிப்பாக நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம்.

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களுக்குப் பின்னர் நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் பிசிஆர் பரிசோதனை ஒன்றை மட்டும் மேற்கொள்ள செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தலுதற்கான வழிமுறைகள் மேற்படி மாற்றங்களால் மாறுபடாது. சுற்றுலாத்துறையில் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் எதிர்காலத்தில்செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

நாடு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலும் சில சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை