பிரேசிலில் தேசிய அளவில் முடக்கநிலைக்கு கோரிக்கை

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய தேசிய முடக்கநிலைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சாவ் பாவ்லோ மாநில அதிகாரிகள் அந்த வேண்டுகோளை விடுத்தனர்.

கடந்த செவ்வாயன்று ஒருநாளில் மட்டும், பிரேசிலில் 2,841 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அது, முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பாகும்.

சாவ் பாவ்லோ மாநிலத்தில் மட்டும் 679 பேர் உயிரிழந்துள்ளனர். அதுவும், இதுவரை இல்லாத எண்ணிக்கையாக உள்ளது.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் வைரஸ் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கொவிட்–19 நோய்ப்பரவல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை அங்கு, நான்கு முறை சுகாதார அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அறிமுகம் செய்யும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, ஜனாதிபதி போல்சொனாரோ தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

தனிமைப்படுத்தும் நடவடிக்கையால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் அதிகம் என்று அவர் வாதிட்டு வருகிறார்.

Thu, 03/18/2021 - 15:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை