பாட மறந்த குயில்கள்

அவுஸ்திரேலியாவின் அரிய ரீஜண்ட் ஹனியீட்டர் குயில்கள் அவற்றின் பாட்டை மறந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தப் பறவைகள் அழிந்துபோகும் விளிம்பில் இருப்பதை அது குறிக்கலாம் என்று அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய பறவைகள் அருகி வருவதால் குஞ்சுகள் பாடக் கற்றுக்கொள்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பாடத் தெரியாத இளங்குயில்கள் இனப்பெருக்கம் செய்யும் சாத்தியமும் குறைவதாக ஆய்வு சுட்டிக்காட்டியது.

எஞ்சியுள்ள ஆண் ஹனியீட்டர் குயில்களில் சுமார் 12 வீதமான குயில்கள் மற்ற இனப் பறவைகளின் பாடல்களைப் பாடி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஒரே இனத்துடன் தொடர்புகொள்ளத் தெரியாத முதல் விலங்கினம் அதுவே என்று ஆய்வு குறிப்பிட்டது. இயற்கையில் சில நூறு குயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிழக்கு அவுஸ்திரேலியாவில் எங்கும் காணப்பட்ட பறவைகள் இப்போது யூகலிப்டஸ் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பாதுகாப்பில் இருக்கும் குயில்களுக்கு ஒலிப்பதிவுகளின் மூலம் பாட்டுகளைக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

Fri, 03/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை