எண்ணெய்க்கு பதில் தடுப்பூசி வாங்க வெனிசுலா திட்டம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டில் இரண்டாம் கட்டமாக வைரஸ் தலைதூக்கியுள்ளது. வெனிசுலாவில் எண்ணெய்க் கப்பல்கள் உள்ளதாகவும், எண்ணெய் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராயிருப்பதாகவும் ஜனாதிபதி மடூரோ குறிப்பிட்டார்.

எண்ணெய் உற்பத்தியில் ஒரு பகுதியைப் பிரித்து, அதைக் கொண்டு தடுப்பூசி பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

வெனிசுலாவில் இதுவரை ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஏ தடுப்பூசி, சீனாவின் சினோபாம் தடுப்பூசி ஆகியவற்றுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறவுள்ள 2.4 மில்லியன் முறை பயன்படுத்தும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகளை ஏற்கப்போவதில்லை என பான் அமெரிக்கா சுகாதார அமைப்பிடம் வெனிசுலா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பிடம் வெனிசுலா கடன் பாக்கி வைத்திருப்பதால், கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை அந்நாட்டுக்குத் தடுப்பூசி எதுவும் விநியோகிக்கப்படவில்லை.

Tue, 03/30/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை