பெரும் வெள்ள அச்சுறுத்தலால் சிட்னியில் பலரும் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் மக்கள் நள்ளிரவு நேரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த பலத்த மழை பிராந்தியத்தில் பெரும் வெள்ளம் மற்றும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சிட்னியை தலைநகராகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சுமார் 12 பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதோடு அங்கிருக்கும் மக்களை வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உயிர் அச்சுறுத்தல் சூழல் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெளியேற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் உடன் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை உதவி ஆணையாளர் டீன் ஸ்டோரி தெரிவித்துள்ளார்.

Mon, 03/22/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை