ஒக்லாந்து நகரில் ஏழு நாட்கள் முடக்கநிலை

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் ஒருவருக்குச் சமூக அளவில் வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அங்கு 7 நாட்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்று இன்னும் தெரியவில்லை. எனினும் 21 வயதான அந்த மாணவன் ஒரு வாரத்திற்கு முன் நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையிலும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முடக்கநிலை நேற்று முதல் நடப்புக்கு வந்ததாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அறிவித்தார். இதன்படி மக்கள் கட்டாய பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மத்திரமே வீடுகளை விட்டு வெளியேற முடியும். பொது இடங்கள் தொடர்ந்து மூடப்படும்.

நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளில் இரண்டாவது நிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது ஒன்றுகூடல்களுக்கான கட்டுப்பாடுகளும் அதில் அடங்கும் என்று ஆர்டன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

நியூசிலாந்தில் வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை 2,000 தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 03/01/2021 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை