நோனாகம வோட்டர் பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறப்பு

நோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (27) திறந்து வைக்கப்பட்டது. 

தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ருஹுணு சுற்றுலா பணியகம் மற்றும் அம்பலந்தொட்ட பிரதேச சபையின் நிதி மற்றும் வளங்களை பயன்படுத்தி ரூபாய் 58இலட்சம் செலவில் இந்த நீரியல்வளப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அம்பலந்தொட்ட பிரதேச சபையின் தலைவர் எம்.ஆர்.பி.தர்ஷன சஞ்ஜீவின் எண்ணக்கருவிற்கமைய கதிர்காமம் -ஹாஃப்வே திட்டத்தின் மற்றொரு கட்டமாக இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அதில் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொதுமக்களை கவரும் பல இடங்கள் காணப்படுகின்றன. 

இந் நிகழ்வில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் விலி கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Mon, 03/01/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை