உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜே.வி.பி. தலைவரிடமும் வாக்குமூலம் பெறப்படும்

- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவருடனான தொடர்பு குறித்து ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் இருவரும் அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக மூன்று கோடிக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு புறக்கோட்டை சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;  

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகிய இளம் வர்த்தகர்களின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் என்ற கோடீஸ்வர வர்த்தகர் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Fri, 03/19/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை