பிரிட்டனின் தடுப்பூசி திட்டத்தில் ஏப்ரலில் தாமதம் ஏற்பட வாய்ப்பு

பிரிட்டனின் தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இம்மாத இறுதியில் கிடைக்கவிருந்த தடுப்பூசிகள் கணிசமாகக் குறையக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்திய உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

அங்கு இதுவரை 25 மில்லியன் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள், பிரிட்டனில் வாழும் பெரியவர்களில் பாதிப் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.

முன்னுரிமை வழங்கப்படும் பிரிவினருக்கு அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் தடுப்பூசி போட அது இலக்கு கொண்டுள்ளது.

அனைத்துப் பெரியவர்களுக்கும் ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி போட பிரிட்டன் திட்டமிடுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து கிடைக்க வேண்டிய ஐந்து மில்லியன் அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏப்ரல் மாதத்தில் குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பு மருந்து விநியோகத்தை இந்தியாவின் சீரம் நிறுவனம் நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Fri, 03/19/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை