கொரோனா சடலங்கள் அடக்கம்; தற்காலிக ஏற்பாடே இரணைதீவு

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொரு மாகாணங்களில் உரிய இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே இரணை தீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொவிட் 19 வைரஸ்  இடைவேளைக்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும் கடற்படையினர் அங்கு நிலைகொண்டிருப்பதையும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இத் தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்துமெனவும் எடுத்துரைத்துள்ளார்.

இக்கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையினால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/04/2021 - 06:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை