உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிகள் ஞாயிறன்று இலங்கைக்கு கிடைக்கும்

 

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்குக் கிடைக்குமென இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் சலுகையின் கீழ் மேற்படி தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கொவெக்ஸ் சலுகையின் கீழ் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாகவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு  தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே:

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து 05 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

அதனைத் தவிர மேலும் 05 இலட்சம் தடுப்பூசிகள் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகள் தற்போது கட்டம் கட்டமாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் 05 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

 

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை