இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் மௌன்ட் சினபக் எரிமலை, 5 கிலோமீற்றர் உயரத்துக்குச் சூடான சாம்பலை வானில் கக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், எரிமலையில் ஏற்பட்ட முதலாவது பெரிய வெடிப்பு இதுவாகும். எரிமலைக்கான எச்சரிக்கை நிலை, இரண்டாம் கட்ட உயரிய நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பால் உயிருடற் சேதம் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் இல்லை. ஆனால், எரிமலையிலிருந்து குறைந்தபட்சம் 3 கிலோமீற்றர் தொலைவில் தள்ளி இருக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் எரிமலை, புவியியல் ஆபத்து குறைப்பு மையம் இதனைத் தெரிவித்தது.

இப்போது இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் குறிப்பிட்ட இளைஞர் ஒருவர், எரிமலைக் குமுறல் நின்றுவிட்டதாகவும் சாம்பலின் அளவு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

8,530 அடி உயரம் கொண்ட சினபக் எரிமலை பல நூற்றாண்டுகள் செயலற்றுக் காணப்பட்ட நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் முறை வெடித்தபோது இருவர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த எரிமலையில் அடிக்கடி நிகழும் வெடிப்புகளில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

Wed, 03/03/2021 - 14:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை