ஒலி நாடாவை கண்டுபிடித்த லூ ஒட்டன்ஸ் காலமானார்

ஒலி நாடாவை கண்டுபிடித்த நெதர்லாந்து பொறியியலாளர் லூ ஒட்டன்ஸ் தனது 94 ஆவது வயதில் காலமானார்.

1960களில் ஒலி நாடாவை அவர் அறிமுகம் செய்தது தொடக்கம் உலகெங்கும் சுமார் 100 பில்லியன் ஒலி நாடாக்கல் விற்பனையாகி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்ஸின் கண்டுபிடிப்பு மக்கள் இசையை கேட்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியபோதும் அண்மைக் காலத்தில் ஒலி நாடாவின் பயன்பாடு குறைந்து காணப்படுகிறது.

கடந்த வார இறுதியில் ஒட்டன்ஸ் தனது சொந்த ஊரான டுயிசலில் மரணித்தார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

1960இல் பிலிப் தயாரிப்பு மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவராக ஒட்டன்ஸ் இருந்தபோதே, அவர் மற்றும் அவரது குழுவினர் ஒலி நாடாவை மேம்படுத்தினர்.

1963இல் பெர்லின் வானொலி மின்னணு கண்காட்சி நிகழ்ச்சியில் அந்த சாதனம் காட்சிக்கு வைக்கப்பட்ட பின்னர் அது உலகெங்கும் வெற்றி பெற்றது.

பிலிப்ஸ் மற்றும் சோனி நிறுவனங்களுடன் ஒட்டன்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் அவரது வடிவ ஒலி நாடாக்கள் காப்புரிமை பெற்றதாக இருந்தது. தொடந்து ஜப்பானிய நிறுவனங்கள் இதேபோன்று ஒலி நாடாக்களை பல்வேறு அளவுகளில் தயாரித்தன.

குறுந்தகடு உருவாக்கியதிலும் ஒட்டன்ஸ் பங்கேற்றுள்ளார். இந்த குறுந்தகடுகள் உலகெங்கும் 200 பில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/13/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை