1.9 ட்ரில்லியன் டொலர் நிவாரணம்: அமெ. ஜனாதிபதி ஒப்புதல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 1.9 ட்ரில்லியன் டொலர் வைரஸ் தொற்று நிவாரண நிதித் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த வார இறுதிக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு நேரடியாக அனுகூலங்கள் சென்றுசேர அது வழிவகுக்கும்.

இதன்படி இந்தத் திட்டத்தால் 85 வீதமான அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள பாராளுமன்றத்தில், ஜனாதிபதி பைடனுக்குக் கிடைத்த முதல் முக்கிய வெற்றியாக அது கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய நோய்ப்பரவலாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று 50 நாட்கள் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/13/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை