ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரு அறிக்கைகள் சபையில்

அமைச்சர் தினேஷினால் சமர்ப்பிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ​நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இந்த அறிக்கைகள் இரண்டையும் நேற்று செவ்வாய்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்கும் 2019 நவம்பர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகள் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஊழல், மோசடிகள் தொடர்பில் ஊழல், மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 03/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை