ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு
- அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளின் கீழ் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு நேற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 39 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நசீல் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நேர்முக தேர்வில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை மேற்கொண்டனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து, அக் குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நேர்முக தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் "பல்நோக்கு அபிவிருத்தி பணி உதவியாளர்களாக" நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)
from tkn
Post a Comment