உருத்திரபுரம் சிவன் கோவில்; தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து மக்கள் எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளவிருந்த அகழ்வு ஆராய்சி பணிகள் பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை உருத்திரபுரம் சிவன்கோவில் பகுதிக்கு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளவென அதிகாரிகள் சென்றனர். எனினும் அங்கிருந்த பொது மக்கள் அவர்களை ஆலயத்துக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தினர்.

வட மாகாண தொல்லியல்  திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அடங்கிய குழுவினர் காலை 11மணியளவில்  உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு அகழ்வாராச்சியை மேற்கொள்ள சமூகமளித்திருந்தனர்.

அதற்கு பொது மக்கள் வீதியை மறித்து அவர்களை உள்ளே செல்ல விடாது கோசங்களை எழுப்பியவாறு தடுத்து நின்றதோடு, வரலாற்றை  மாற்றாதே, மனங்களில் புத்தரை தேடு, மண்ணில் புத்தரை தேடாதே, எங்களது சிவன் எங்களுக்கு வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

Thu, 03/25/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை