வடகொரியா ஏவுகணை சோதனை: கவலையில்லை என்கிறார் பைடன்

வட கொரியா இரு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது பற்றி கவலை கொள்ளவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் வட கொரியாவின் முதல் ஏவுகணைச் சோதனையாக இது உள்ளது.

'இது வழக்கமான ஒன்று' என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக பைடன் குறிப்பிட்டார்.

கண்டம் விட்டு கண்டம் பாயாத இரு குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக குறிப்பிட்டிருக்கும் வட கொரியா, இது ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிரானதல்ல என்று தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் ஒன்வோனில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மஞ்சள் கடலை நோக்கி இரு குரூஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தென் கொரியா குறிப்பிட்டது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவ பயிற்சி பற்றி வட கொரியா கண்டனம் வெளியிட்டிருக்கும் நிலையிலேயே இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. அதேபோன்று வட கொரியாவுடன் தொடர்பை ஏற்படுத்த பைடன் நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 03/25/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை