மூத்த பத்திரிகையாளர் கலாசூரி வீ.பீ. சிவப்பிரகாசம் காலமானார்

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் கலாசூரி வீ.பீ.சிவப்பிரகாசம் நேற்றுமாலை ஐந்து மணியளவில் தனது பிறந்த ஊரான அக்கரைப்பற்றில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது எண்பத்தி ஐந்து. 

1951ல் வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய நிருபராக தனது சேவையை ஆரம்பித்த இவர் 1956ம் ஆண்டில் ‘ரேடியோ சிலோனில்’ தட்டெளுத்தாளராக இணைந்து கொண்டார். இதனையடுத்து 1957ம் ஆண்டு ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் அக்கரைப்பற்று குறூப் நிருபராக இணைந்துகொண்ட இவர் சம காலத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஆரம்பகால நிருபராகவும் பணிபுரிந்துள்ளார். இதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுஸ்தாபனம் ஆகியவைகளின் ஆரம்பகால நிருபராகவும் இறக்கும் வரை சேவையாற்றி வந்தார். 

அமரர் சிவப்பிரகாசம் ஊடகத்துறையில் எப்போதும் நடு நிலையைபேணும் ஒரு நிருபராக தன்னை அடையாளப் படுதிக்கொண்டமையாயால் எல்லா சமூகத் தினரும் விரும்பும் ஒரு நிருபராக மதிக்கப்பட்டார்.  

அரச சேவையில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக குறிப்பாக அம்பாறை கச்சேரியில் பணிபுரிந்த இவர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.   

ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் தலைவராக சேவையாற்றி வந்த இதேவேளை ஒரு முழு நேரப் பத்திரிகையாளராகவும் பணியாற்றிவந்தார்.  இறுதிக்கிரிகைகள் (இன்று 02) அக்கரைபற்று இந்து மயானத்தில் நடைபெறும். இவரது மனைவி மற்றும் இரு ஆண் பிள்ளைகளும் ஏற்கெனவே இறந்துள்ள தோடு இறுதிக் காலத்தில் அவர் தனது பேரப்பிள்ளைகளுடனே வாழ்ந்து வந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Tue, 03/02/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை