யாழில் தொற்று தீவிரம் நேற்று 1500 பேரிடம் PCR

முடிவுகளுக்காக சுகாதாரப் பிரிவு காத்திருப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நேற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சுமார் ஆயிரத்து 500 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வரை அவை வெளியாகவில்லை.

யாழ்.நகர வர்த்தகர்களிடம் நேற்று முன்தினம் பெறப்பட்ட 870 மாதிரிகள் பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாற்பண்ணைப்பகுதி மக்களிடம் முத்துத்தம்பி பாடசாலையில் வைத்துப் பெறப்பட்ட 172 மாதிரிகளும் நேற்று நகர வர்த்தகர்களிடம் பெற்ற 596 மாதிரிகளுமாக மொத்தம் 768 மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் மாதிரிகளும் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்படுவதனால் இவற்றில் ஓரு தொகுதியான நேற்று நகர வர்த்தகர்களிம் பெறப்பட்ட மாதிரிகள் இன்றைய தினமே பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாற்பண்ணைப்பகுதி மக்களிடம் முத்துத்தம்பி பாடசாலையில் வைத்துப் பெறப்பட்ட 172 மாதிரிகளும் நேற்று நகர வர்த்தகர்களிடம் பெற்ற 596 மாதிரிகளுமாக மொத்தம் 768 மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் மாதிரிகளும் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்படுவதனால் இவற்றில் ஓரு தொகுதியான நேற்று நகர வர்த்தகர்களிம் பெறப்பட்ட மாதிரிகள் இன்றைய தினமே பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 03/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை