கண்டியில் பிறந்த அதிசய நாய்க் குட்டி!

கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து கால்நடை வைத்தியர் ஒருவரிடம் வினவிய போது, விலங்குகளின் கருவில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் பிரசவத்தின் போது வெடிக்கும் என்றும் அவற்றில் வெளியாகும் பிலிவடின் பதார்த்தம் சில சமயங்களில் பிறக்கும்போதே தோலில் படிவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் இதுபோன்ற வேறு நிறங்களைக் கொண்ட குட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பச்சை மற்றும் நீல நிறக் குட்டிகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதுடன், இவ்வாறான விடயங்கள் மிக அரிதாகவே இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்தினால் சில நாட்களில் இந்த நிலை மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tue, 03/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை