ட்ரம்பின் எல்லைச் சுவரை இரத்துச் செய்தார் பைடன்

எல்லைச் சுவர் கட்டுவதற்காக நிதி பயன்படுத்தும் டொனால்ட் டிரம்பின் அவசர உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.

இந்த உத்தரவு தேவையற்றது என்றும் வரிப்பணம் தொடர்ந்தும் சுவர் கட்டுவதற்கு பயன்படுத்த முடியாது என்றும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு எழுதிய கடித்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெற்கு எல்லையில் 2019 ஆம் ஆண்டு அவசர நிலை ஒன்றை பிறப்பித்து சுவர் கட்டுவதற்கு இராணுவ நிதியை பயன்படுத்த உத்தரவிட்டார்.

டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும்போது இந்தத் திட்டத்தில் சுமார் 25 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதியின் திட்டங்களை மீளப்பெறும் பைடனின் நடவடிக்கைகளில் ஓர் அம்சமாகவே இந்த உத்தரவு அமைந்துள்ளது.

டிரம்ப் காலத்து கொள்கையால் பிரிக்கப்பட்ட குடியேறிகள் குடும்பங்களை ஒன்றிணைக்கும் உத்தரவு ஒன்றில் பைடன் கடந்த வாரம் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 02/13/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை