ஏறாவூர் வைத்தியசாலையில் உதவியாளர்கள் போராட்டம்

சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கல் ஆகியன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார உதவியாளர்களும் கவனயீர்ப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலை முன்றலில் இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைளை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்திநின்றனர். இதன்போது சீருடைக்கென தற்போது வழங்கப்படுகின்ற 9 ஆயிரத்து 600 ரூபாவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்,

மேலதிக நேர வேலைக்காக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்,

180 நாட்கள் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், இடர்கால கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும்,

வாரத்தில் ஏழு நாட்கள் பணியாற்றுகின்ற போதிலும் ஐந்து நாட்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற பத்து கோரிக்கைகள் சுகாதாரத் துறை ஊழியர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் நிருபர்

 

Fri, 02/19/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை