நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 31 பட்டதாரி பயிலுனர்களை பாடசாலையில் இணைப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (16) அக்/அல்-பஹ்ரியா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பட்டதாரி ஆசிரிய பயிலுனர்களுக்கான இணைப்பு கடிதங்களை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மௌலவி முகம்மட் காசீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா பாத்திமா மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், என பலரும் கலந்துகொண்டு கடிதங்களை வழங்கிவைத்தனர்.
நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்
from tkn
Post a Comment