ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

- ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மேலும் 30 பேருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற 8 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியட் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்ட சிசிர மென்டிஸ் ஆகியோருக்கெதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டை தாக்கல் செய்யுமாறு மேற்படி விசாரணைக்குழு தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில் எந்தவித அறிவிப்பையும் விடுக்காமை மற்றும் மேற்படி தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றம் தொடர்பில் மேற்படி குற்றவியல் குற்றத்தை தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

2019 ஏப்ரல் ஈஸ்டர் தினத்தன்று சில கத்தோலிக்க தேவாலயங்கள், சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் சிலவற்றிலும் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/08/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை