கஸகஸ்தான் நாட்டிலிருந்து 165 சுற்றுலா பயணிகள் வருகை

கொவிட் 19 கொரோனா தொற்றினை சிறந்தமுறையில் கட்டுப்படுத்திய நாடு என்ற வகையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு எமது நாட்டின் விமான நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. இதனையடுத்து கஸகஸ்தான் நாட்டின் தேசிய விமானசேவைக்கு சொந்தமான எயார் A 321 LR விமானம் முதல் தடவையாக கஸகஸ்தான் நாட்டின் அல்மாட்டிலிருந்து 165 சுற்றுலாப் பயணிகளுடன் மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினை நேற்றுமுன்தினம் (06 ) வந்தடைந்தது.

விமானத்தினையும் சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கும் நிகழ்வு சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம் பெற்றது.

அதில் விமானசேவைகள்,ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ.சானக,விமானநிலைய,விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு ) ஜீ. ஏ. சந்திரசிரி,சிவில் விமானசேவைகள்அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ உட்பட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இவ் விமான சேவை கடந்த சனிக்கிழமை(06) முதல் ஏப்ரல் மாதம் வரை அல்மாட்டிலிருந்து மத்தலை வரை விமான சேவையினை முன்னெடுக்கவுள்ளது. இதனூடாக இலங்கையின் சுற்றுலாத் துறைமற்றும் விமானநிலையம் என்பன பாரியளவில் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைஅரசாங்கம் சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப BIO BUBLE முறையில் ஏற்கனவேபதிவுசெய்தஹோட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கவைக்கபட்டு அதனூடாக சுற்றுலாவில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாப் பயணிகளக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Mon, 02/08/2021 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை