வத்திக்கானின் முக்கிய பதவி: முதல்முறை பெண் நியமனம்

ஆயர்களின் ஆலோசனை சபைக்கு நேருதவிச் செயலாளராக முதல்முறை பெண் ஒருவரை பாப்பரசர் நியமித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் பிரான்ஸைச் சேர்ந்த அருட்சகோதரி நதாலி பெக்குவார்ட் அந்த சபையில் வாக்குரிமை அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார். இந்த சபையானது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் பாப்பரசருக்கு ஆலோசனைகள் வழங்குகிறது.

பெக்குவார்ட் 2019 தொடக்கம் இந்த ஆலோசனை சபையில் ஒரு ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். “கதவு ஒன்று திறக்கப்பட்டிருப்பதை இந்த நியமனம் காட்டுகிறது” என்று ஆலோசனை சபையின் செயலாளர் நாயகம் கருதினால் மரியோ கிரேச் தெரிவித்தார்.

நிர்வாக அமைப்பு மற்றும் பலிபீடத்திற்கு பெண்களை அனுமதிப்பதற்கு திருச்சபை சட்டத்தில் பாப்பரசர் உத்தியோகபூர்வ மாற்றங்களை கொண்டுவந்து ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வத்திக்கான் நிதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் சபைக்கு ஆறு பெண்களை பாப்பரசர் கடந்த ஆண்டு நியமித்திருந்தார்.

Mon, 02/08/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை