டிரம்பின் கிரீன் கார்ட் தடையை திரும்பப் பெற்றார் ஜோ பைடன்

கிரீன் கார்ட் வழங்குவதற்கான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த தடையை பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் அகற்றியுள்ளார்.

இந்தத் தடை அமெரிக்காவுக்கான பல சட்டபூர்வ குடியேறிகளை தடுப்பதாக உள்ளது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொழில் சந்தையை பாதுகாக்கவெனக் கூறி 2020 இறுதி வரை கிரீன் கார்ட் வழங்குவதை நிறுத்த டிரம்ப் நிர்வாகம் உத்திரவிட்டிருந்தது.

எனினும் இது அமெரிக்க பிரஜைகள் மற்றும் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்களின் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதை தடுப்பது உட்பட அமெரிக்காவுக்கு பாதகமாக உள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“உலகெங்கும் உள்ள திறமைகளை பயன்படுத்தும் அமெரிக்காவின் தொழில்துறைக்கும் இது பாதகமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்றது தொடக்கம் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மீளப்பெறும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவர் பதவி ஏற்ற முதல் தினத்திலேயே 13 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணக் கட்டுப்பாட்டை நீக்கினார். அதேபோன்று அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் மேற்கொள்ளப்பட்ட எல்லைச் சுவர் நிர்மாணத்தையும் நிறுத்தினார்.

 

Fri, 02/26/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை