ரஷ்ய தடுப்பூசி 91 வீதம் செயல்திறன் கொண்டது

கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91 வீதம் செயல்திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது.

தி லென்சன்ட் மருத்துவ சஞ்சிகை அது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரஷ்யத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இறுதிக்கட்டப் பரிசோதனை முடிவு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அந்தத் தடுப்பூசி மக்களுக்குப் போடப்பட்டதால் அத்தகைய சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், ரஷ்யத் தடுப்பூசியால் பெரிய அளவில் சிக்கலான பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரஷ்யத் தடுப்பூசி நல்ல பலன் கொடுத்திருப்பதாகவும் அது கூறியது.

இரண்டு முறை போடப்பட்ட தடுப்பூசி, நோய்த்தொற்று அறிகுறி காணப்பட்டவர்களிடம் மட்டுமே செயல்திறன் மிக்கதாக உள்ளது.

அறிகுறி ஏதும் தெரியாதவர்களிடம் அதன் செயல்திறன் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Thu, 02/04/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை