தோட்டத்தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு மத தலைவர்கள் ஆதரவு

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துக்கான ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சமய தலைவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இது குறித்து அஸ்கிரிய விகாரை பிரதான செயலதிகாரி ஆச்சரிய மெதகம தம்மானந்த தேரர் கருத்து தெரிவிக்கையில்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக மிகவும் உணர்வு பூர்வமாக வேலை செய்பவர்கள் தோட்டத்தொழிலாளர்கள். அதனால் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை. ஆகவே இன்றுள்ள பொருளாதார நிலையினை கருத்திற் கொண்டு அவர்களின் வாழ்க்கை நிலையும் அவர்கள் படும் துன்பங்களையும் கருத்திற் கொண்டு கம்பனிகள் எவ்வித போராட்டம் இன்றி அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்த கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பர்னாண்டோ பிள்ளை கருத்து தெரிவிக்கையில் இன்று பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வாழும் தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சம்பளத்திற்காக மிகவும் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு குரல் கொடுத்துள்ளார்கள் அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது.

இன்று உள்ள பொருளாதார சுமைகளை கருத்திற் கொண்டு கம்பனிகள் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.ஆகவே அவர்களின் நியாயமான சம்பள குரலுக்கு எனது குரலும் இணையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹற்றன் விசேட நிருபர்

Thu, 02/04/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை