இம்மாதம் 02ஆவது வாரம் முதல் பொருட்களின் விலை குறையும்

- கொவிட்-19 தடுப்பூசி மூலம் முழு நாட்டையும்
- பாதுகாத்த முதலாவது நாடு என்ற இலக்கை அடைதல்

கிராமத்துடன் கலந்துரையாடல் - வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணைக் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (03) அலரி மாளிகையில் நிறுவப்பட்டது.

பொருளாதார புத்தெழுச்சிய மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய செயற்படும் இந்த தேசிய ஒருங்கிணைப்பு துணை குழுவில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறைக்கு, வேளாண் துணைக்குழு, வாழ்வாதார துணைக்குழு, உட்கட்டமைப்பு துணைக்குழு, சமூக உட்கட்டமைப்பு துணைக்குழு மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு துணைக்குழு என ஐந்து தேசிய ஒருங்கிணைப்பு துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஒவ்வொரு குழுவிற்கும் துறை சார்ந்த ரீதியில் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராமியக் குழு ஆகியவை மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு முடிவுகளை பாய்ச்சுவதற்கும், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு யோசனைகள் மற்றும் திட்டங்களை பாய்ச்சுவதற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் செயல்திட்டத்தை நாம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியிலிருந்து செயற்படுத்தினோம். அக்காலப்பகுதியில் நாம் கிராமத்தின் குறைபாடுகளை கண்டறிந்த போதிலும் இது தொடர்பில் அரச அதிகாரிகளை பங்குபெறச் செய்ய முடியாது போனது. எனினும், தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் 14,000 கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. 36,000 கிராமங்கள் காணப்படுகின்றன. அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் நாம் பணியாற்ற வேண்டும்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இது பெரும்பாலும் பிரதேச செயலாளர்கள் அல்லது அதிகாரிகளால் செய்யப்பட்டது.

அதனால் பின்வரிசை உறுப்பினர்கள் போலவே, உங்களுக்கும் கிராமம் மற்றும் வாக்காளர்களின் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான ஒரு முறை காணப்படவில்லை. இதன் விளைவாக, பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு சில நேரங்களில் அரசியல் தலைமை கிடைக்காமல் போனது.

வடக்கு, கிழக்கு தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முடிவின்படி, அவற்றின் தலைவர் பதவிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

Thu, 02/04/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை