சவூதி பெண் செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை

சவூதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டளாரான லூஜின் அல் ஹத்லால் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

லூஜின் அல் ஹத்லால் சவூதி பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல்கள் வலுவாக எழுந்தன. இந்த நிலையில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனைகளுக்குப் பின்னர் லூஜின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை அவரது சகோதரி லினா அல் ஹத்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், “லூஜின் வீட்டில் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். அவரது விடுதலை குறித்து சவூதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Fri, 02/12/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை