27 அத்தியாவசியப் பொருட்கள் சலுகை விலையில் மக்களுக்கு

உற்பத்தியாளர், இறக்குமதியாளர்களுடன் அமைச்சர் பந்துல ஒப்பந்தம் கைச்சாத்து

இருபத்தியேழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து அடுத்த மூன்று மாதங்களுக்கு சலுகை விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் உடன்படிக்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடி இறக்குமதியாளர்களுக்குமிடையில் நேற்று வர்த்தக அமைச்சில் செய்து கொள்ளப்பட்டது. இதில் கருத்து வெளியிட்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, செய்துக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மக்கள் பயன்படுத்தும் 27 அத்தியாவசியப் பொருட்கள் தற்போது விற்கப்படும் விலைகளுக்கு குறைவான விலையில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.

அரசத்துறையை போன்று தனியார்த்துறையும் இவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டத்தில் கைகோர்த்துள்ளமை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய அமைச்சரவையின் அனுமதியின் ஊடாக தற்போது உள்ள வாழ்க்கைச் செலவையும் குறைந்த வாழ்க்கைச் செலவை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த உடன்படிக்கை நடைமுறையிலிருக்கும்.

சிவப்பு பச்சரிசி, வெள்ளை அரிசி, வெள்ளை நாட்டரிசி, சம்பா அரிசி, கீரி சம்பா , கோதுமை மா, வெள்ளை சீனி, சீனி, தேயிலை, சிவப்பு பருப்பு(அவுஸ்திரேலியா), பெரிய வெங்காயம் (இந்தியா), உருளைக்கிழங்கு (உள்நாடு), உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்), கடலை, காய்ந்த மிளகாய், ரின் மீன் (உள்நாடு) ரின் மீன் (இறக்குமதி), நெத்தலி (தாய்லாந்து), கோழி இறைச்சி (வரையறுக்கப்பட்டவை), உப்பு, பால்மா, சோயா எண்ணெய், ஆடை கழுவும் சவர்க்காரம், வாசனை சவர்க்காரங்கள் மற்றும் பற்பசைகள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு மக்களுக்கு சலுகை விலையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/05/2021 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை