20 நாட்டு பயணிகளுக்கு சவூதி அரேபியா வரத் தடை

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக 20 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவில் இருந்து அரசுத் தரப்பில் அலுவல் ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவூதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸால் 3.68 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 6,383 பேர் உயிரிழந்தனர் என்று ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத் தகவல் குறிப்பிடுகிறது.

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை