மஸ்கெலியா மொக்கா வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் காணி தீக்கிரை

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தின் மிட்லோதியன் பிரிவில் உள்ள வனப்பகுதியில் நேற்று நண்பகல் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கு இரையாகியுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்தத் தீ காரணமாக வனப்பகுதியில் காணப்பட்ட பெறுமதியான மரங்கள் தாவரங்கள் தீக்கு இரையாகியுள்ளதாகவும் சிறுத்தை, பன்றி உட்பட சிறு விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசமிகளால் இந்த தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கம் மஸ்கெலியா பொலிசார் தீ வைத்தவர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடியுள்ளதுடன் தொடர்ந்து இவ்வாறு வனப்பகுதிகளுக்கு தீ வைக்க வேண்டாமென்றும் வேண்டுக்கோள் விடுத்தனர்.

இவ்வாறன தீ வைப்புகள் காரணமாக மரங்கள், தாவரங்கள் மட்டுமன்றி விலங்குகள், பறவைகளும் பாதிக்கப்படுவதுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இவ்வாறான தீ வைப்புகளில் ஈடுப்படுபவர்கைள் அடையாளம் காட்ட வேண்டும் என்றும் மஸ்கெலிய பொலிசார் வேண்டுகோள் விடுத்தனர்.

கொட்டகலை தினகரன் நிருபர்

Thu, 02/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை