ரூ.1,000 சம்பள அதிகரிப்புடன் கூட்டு ஒப்பந்த சலுகைகள்

எதிரணியின் பொய்ப் பிரசாரங்கள் தவிடுபொடி

தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு விடயத்தில் நாம் வெற்றி கண்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட மாட்டாதென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுமென தெரிவித்த அவர், கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகளே பிரசாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு எந்த முடிவும் கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சேபனைகளை வழங்குவதற்காக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனையடுத்து 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வர்த்தமானி வெளியிடப்படும் தினத்திலிருந்து சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவனில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் பிரதமரின் மாவட்ட இணைப்புச் செயலாளரும் இதொகாவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டு விளக்கமளித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

 

Wed, 02/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை