பொல்பிதிகம கலாசார நிலையம் பிரதமரினால் திறப்பு

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிறுவப்பட்ட பொல்பிதிகம கலாசார நிலையம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் (09) திறந்து வைக்கப்பட்டது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கி, பொது நிதியத்திலிருந்து இந்த கலாசார நிலையம் 25 மில்லியன் ரூபாய் நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமரினால் கலாசார நிலையத்திற்கான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சீ.பீ.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ.ஹேரத், அனுராத ஜயரத்ன, சனத் நிசாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்னசேகர, சுமித் உடுகும்புர, அசங்க நவரத்ன, மஞ்சுளா திசாநாயக்க, சாந்த பண்டார, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, புத்தசான சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை