தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை யாருக்கு?

டாக்டர் சுதத் சமரவீர தெளிவுபடுத்தல்

இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பினால் அவசர நிலைமைகளில் உபயோகிப்பதற்கு பொருத்தமானதென பரிந்துரை செய்யப்பட்ட தடுப்பூசி மாத்திரமே என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுத்தம் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனோ தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்போது முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

எந்தவகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது, அவற்றை எவ்வாறு களஞ்சியப்படுத்துவது அதற்கான வசதிகள், அதனை உபயோகிக்கும் போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது? ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

அது வேளை, மேற்படி தடுப்பூசியை களஞ்சியப்படுத்துவதற்கான குளிரூட்டி வசதிகள் போக்குவரத்து வசதிகள், எந்த இடத்தில் வைத்து நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகளை உபயோகப்படுத்தும் போது சுகாதாரத்துறையினர், தொடர்ந்தும் படுக்கையில் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் நாட்டின் பொருளாதார முக்கிய கேந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கே முன்னுரிமையளிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/08/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை