சுமுகமான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் இணங்கினார்

அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்பதை உறுதி செய்த நிலையில் சுமுகமான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார். எனினும் அவர் தேர்தல் மோசடி பற்றி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப் இது தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பில், “தேர்தல் முடிவுடன் என்னால் முழுமையாக இணங்க முடியாததோடு உண்மையான ஆதாரங்கள் இருந்தபோதும் ஜனவரி 20 ஆம் திகதி சுமுகமான அதிகார மாற்றம் இடம்பெறும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட நிலையில் தனது பேச்சாளரின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சட்டபூர்வமான வாக்குகள் மாத்திரமே என்னப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு நாம் தொடர்ந்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வந்தேன். ஜனாதிபதி வரலாற்றில் மிகச் சிறந்த முதல் தவணையின் பிரதிநிதித்துவம் முடிவுக்கு வருவதோடு அது அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றும் போராட்டத்தின் ஆரம்பம் மாத்திரமே” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு எதிராக டிரம்ப் தரப்பினர் 60க்கும் மேற்பட்ட வழக்குகளை முன்னெடுத்தபோதும் அவை அனைத்தும் தோல்வி அடைந்தன.

Fri, 01/08/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை