நியூசி. பாராளுமன்ற வாசல் கதவினை தகர்த்தவர் கைது

நியூசிலாந்து பாராளுமன்றக் கட்டடத்தின் பிரதான வாசலில் உள்ள கண்ணாடிக் கதவை ஒருவர் கோடாரியால் தகர்த்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஓர் ஆடவர் கோடாரியுடன் சுற்றித் திரிவதாக அதிகாலை ஐந்தரை மணிக்குத் தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். பத்து நிமிடத்துக்குள் அந்த 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

பாராளுமன்ற வாசலில் உள்ள கண்ணாடிக் கதவைச் சேதப்படுத்திய அவர் உள்ளே நுழைய முயலவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 120 பேர் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர். சம்பவம் நடந்தபோது உறுப்பினர்கள் சிலர் அங்கிருந்தனர்.

வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாகவும், அபாயமான ஆயுதம் வைத்திருந்ததாகவும் அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

Thu, 01/14/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை