அமெரிக்காவுக்கு செல்வோருக்கு கொரோனா சோதனை அவசியம்
அமெரிக்காவிற்குச் செல்லும் பயணிகள் இனி கொவிட்–19 பரிசோதனைகள் செய்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழையும்போது பயணிகள் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிய நடவடிக்கை இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை இனி எல்லா நாட்டுப் பயணிகளும் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடவடிக்கை அமெரிக்கர்களுக்கும் பொருந்தும். கொவிட்–19 நோய்த்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 22 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 375,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பயணிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டால் அவர்களால் ஏற்படும் உள்நாட்டு நோய்ப்பரவலை கட்டுக்குள் வைக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
from tkn
Post a Comment