ஸ்பெயினில் கடுங்குளிர்

மத்திய ஸ்பெயினில் வார இறுதியில் பதிவான பனிப்பொழிவை அடுத்து அங்கு கடும் குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது.

உறைநிலைக்குக் கீழ் மைனஸ் 25 பாகை செல்சியஸ் தட்பவெப்பநிலை பதிவாகும் நிலையில் வயதானவர்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் காலநிலையால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக பார்சிலோனாவில் வீடற்றவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பனிக்கட்டியில் சறுக்கி விழுந்து சுமார் 1,200 பேர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் கண்டிராத குளிரில் மக்கள் அவதியுறுகின்றனர்.

பிளோமினா புயலால் கொட்டிய பனி தற்போது பனிக்கட்டிகளாக மாறியுள்ளது. அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மிதமான குளிர் பிரதேசமான ஸ்பெயினில் குளிர்காலத்தில் ஓரளவுதான் பனி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீ ழாக உள்ளது.

Thu, 01/14/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை