எகிப்தின் சக்காரா தொல்பொருள் தளத்தில் புதிய கண்டுபிடிப்புகள்

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு தெற்காக உள்ள சக்கார பழங்கால இடுகாட்டு நினைவிடத்தில் பண்டைய இறுதிக்கிரியைக் கோயில் உட்பட புதிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் தலைமையிலான குழு 50க்கும் மேற்பட்ட கல் சவப்பெட்டிளைக் கண்டுபிடித்ததாக எகிப்தின் சுற்றுலா, தொல்பொருள் அமைச்சு தெரிவித்தது. 

அவை 10முதல் 12மீற்றர் ஆழத்தில் 52புதைகுழிகளில் காணப்பட்டதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் கி.மு 16ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு 11ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை. 

டெட்டி மன்னரின் மனைவியான ராணி நேர்ட்டின் நினைவிட ஆலயமும் செங்கற்களால் செய்யப்பட்ட மூன்று கிடங்குகளும் அந்த இடத்தில் இருந்ததாக ஹவாஸ் கூறினார். சக்காரா 12க்கும் மேற்பட்ட பிரமிடுகள், பண்டைய மடங்கள், விலங்குகளை அடக்கம் செய்யும் இடங்கள் ஆகியவற்றைக் கொண்டது.   

Mon, 01/18/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை