பொருளாதார வளர்ச்சியை பொறுக்க முடியாது எதிரணி பொய்ப் பிரசாரம்

- அமைச்சர் விமல்

எதிர்வரும் 4--,5வருடங்களில் நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்ட எதிரணி பொய்களை கூறி மீண்டும் மக்கள் மனதை  குழப்ப எதிரணியினர் முயற்சி செய்கின்றார்கள் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். 19மாடிகளுடன் கூடிய சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக திட்டத்தின் முதலாவது கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற வேளையில் கைத்தொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை இந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக தாம் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் எதிர்காலத்திற்காகவே ஏற்படுத்தினார்கள். தொற்று நிலைமையிலும் கூட குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் கூடிய நாட்டையே எம்மிடம் ஒப்படைத்தார்கள்.

ஆனால் நாட்டை அந்நிலையிலிருந்து மீட்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து எமது அரசாங்கம் தலைமை வகித்து வருகின்றது. எதிர்க்கட்சியினர் இதனை காணப் பொறுக்காது 2015 ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் அவர்கள் மேற்கொண்ட பொய் பிரசாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் எமது அரசாங்கம் ‘சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில்’ கூறியவாறு கொடுத்த வாக்குறுதியை முறையாக நிறைவேற்றுவார்கள் என நாட்டு மக்கள் அறிவார்கள். சுற்றுலாத்துறை பாதிப்படைந்தாலும் தொற்று நிலையிலும் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் சென்கின்றார்கள் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றார். 

Mon, 01/18/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை