டொனால்ட் ட்ரம்பின் ட்விற்றர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்” அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரம்பின் கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட சமீபத்திய ட்வீட்டுகள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலையையும் தீவிர மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறியது.

முன்னதாக, அமெரிக்க பாராளுமன்றத்தின் மீது ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் மீண்டும் தங்களது சமூக ஊடகத்தின் விதிமுறைகளை மீறினால், அவர் “நிரந்தரமாக” தடைசெய்யப்படுவார் என்று அப்போது ட்விட்டர் எச்சரித்திருந்தது.

அமெரிக்க பாராளுமன்ற வளாகமான கேப்பிட்டலை சூறையாடியவர்களை “தேசபக்தர்கள்” என்று குறிப்பிட்டு பல ட்விட்டர் பதிவுகளை ட்ரம்ப் வெளியிட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை