அரச நிறுவனங்களுக்கு அமைச்சர் ஜனக பண்டார அறிவுறுத்து

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரச நிறுவனங்களில் தேவைக்கேற்ப மட்டுமே ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையையடுத்து மீண்டும் இன்று முதல் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நிறுவன  பிரதானிகளுக்கு மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே ,ஜே ரத்னஸ்ரீ அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பிரதானி களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.

எனினும் இன்றைய தினம் வழமைபோன்று அரசாங்க ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்தின் பிரதானி அதற்கான முடிவை மேற்கொண்டு அவசியமான ஊழியர்களை மட்டுமே கடமைக்கு அழைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை தனிமைப்படுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் உரித்தானதல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை