கட்டாருடன் உறவை மீண்டும் ஆரம்பித்தது சவூதிக் கூட்டணி

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டார் மீது தடைகளை கொண்டுவந்த நான்கு அரபு நாடுகளுக்கும் கட்டாருக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹத் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்புக் கௌன்சில் மாநாட்டில் வைத்து தமது வேறுபாடுகளை முழுமையாக களைவதற்கு இந்த நாடுகள் இணங்கியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக சவூதி முடிக்குரிய இளவரசர், கட்டார் எமிரை பொதுவெளியில் கட்டித்தழுவினார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டு 2017 ஆம் ஆண்டில் கட்டாருடனான உறவை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து துண்டித்துக்கொண்டன.

கட்டார் மீது இந்த நாடுகள் கொண்டுவந்த முற்றுகையை கைவிட விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கட்டார் ஏற்க மறுத்தது. இதில் கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூடுவது மற்றும் ஈரானுடனான உறவை நிறுத்துவது போன்ற நிபந்தனைகளும் அடங்கும்.

இந்த இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குவைட் மற்றும் அமெரிக்கா அண்மைய மாதங்களில் மத்தியஸ்த செயற்பாடுகள் ஈடுபட்டன.

Thu, 01/07/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை