தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 1067 பேர் ஒரே நாளில் கைது

- என்ரிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 1060 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு என்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 550 பேர் என்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட துடன் மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு என்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதை வேளை முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை அலட்சியப்படுத்திய மை தொடர்பில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் மேலும் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் மேற்படி குற்றங்களுக்காக இதுவரை 2253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினமும் மேல் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், அவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு என்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/07/2021 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை