இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம் அமுல்

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெப்ரவரி நடுப்பகுதி வரை இங்கிலாந்தில் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதியவகை கொரோனா வேகமாகப் பரவி வருவதால் இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த திங்கள்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய பொரிஸ் ஜோன்சன், வேகமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

பொதுமுடக்கம் காரணமாக பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். மேலும் மக்கள் தங்கள் பணிகளை வீடுகளில் இருந்தே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 65 ஆயிரத்து 842 பேர் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஸ்காட்லாந்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 01/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை